

மாலத்தீவு பகுதிக்கு வேலைக்குச் சென்ற மகன் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும்,
அவரை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி அவருடைய தாய் கண்ணீர் மல்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரதிவிமங்கலம் பகுதியை சேர்ந்த ரத்தினவேல் என்பவருடைய மகன் சதீஷ் மாலத்தீவு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.