திருவள்ளூர் அருகே அதிக நேரம் செல்போனில் பேசி கொண்டிருந்ததாக மதுபோதையில் கண்டித்த மகனை, பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தாயை, போலீஸார் கைது செய்தனர். நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்பவர் இரவு நேரத்தில் செல்போனில் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஜெயந்திக்கும், மது போதையில் வந்த அவரது மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகன் மீது அவரது தாயார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக சொல்லப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.