கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தகாத உறவில் பிறந்த பெண் குழந்தையை பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டம்பட்டியை சேர்ந்த திருமணமான தியாகராஜன் என்பவருடன் கல்யாணம் ஆகாத இளம்பெண் காதல் வயப்பட்டார். அதன்காரணமாக கருவுற்ற அப்பெண், தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில், அப்பெண்ணுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால், குழந்தையை வேறொரு பெண்ணிடம் பணத்திற்கு விற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், தியாகராஜனை போலீசார் கைது செய்தனர்.