புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார். எம்.ராசியமங்கலத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில் இந்திராணி என்பவரை அவரது இரண்டாவது கணவர் முருகன் என்பவர் அரிவாளால் வெட்டினார். அதனை தடுக்க முயன்ற இந்திராணியின் தாயையும் அவர் வெட்டினார்.