அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய், தந்தையை போலீசார் கைது செய்தனர். குழுமூர் காலணி தெருவை சேர்ந்த மதிவண்ணன் வீட்டின் அருகே, கருகிய நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது மனைவிக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்ததால், அதனை குப்பையில் போட்டி எரித்து விட்டதாக மதிவண்ணன் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார், நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், திவ்யா கர்ப்பமாக இருந்ததை மறைத்து வந்த நிலையில், திடீரென குழந்தை பிறக்கவே, அது தனக்கு பிறக்கவில்லை என சந்தேகமடைந்த மணிவண்ணன், குழந்தையை தூக்கி வீசியதால் அது இறந்து விட்டது.