கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உயிரோடு இருக்கும் தாய் இறந்ததாக கூறி, இறப்பு சான்றிதழ் போலியாக பெற்று நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி மோசடி செய்ததாக, மகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மறுவதேத்தரி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி கல்யாணியின் வீட்டை அபகரித்து, அதன் மூலம் அவரது மகள் பானுமதி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.