தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அடுத்த மேல நம்பிபுரத்தில் வீட்டில் தாய், மகள் சடலமாக கிடந்த நிலையில், 13 சவரன் நகை மற்றும் பணம் காணாமல் போனதால் நகைக்காக இந்த கொலை நடந்ததா, என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூவன் என்பவருடைய மனைவி சீதாலட்சுமி மற்றும் மகள் ராம ஜெயந்தி இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.