திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் கிராமத்தில் சூறைக்காற்றால் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறிய விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.