50 ஆண்களுக்கு மேலாக அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. மதுரையில், மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் பனங்கல் சாலையில் இருந்து பேரணியாக சென்றனர். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.