திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சுப முகூர்த்த தினம் என்பதால் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.