Also Watch
Read this
50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடைத்து சேதம்.. வாகங்களை அடித்து உடைத்த போதை ஆசாமிகள்
மதுரை ,சிந்தாமணி
Updated: Sep 29, 2024 12:44 PM
மதுரை சிந்தாமணி பகுதியில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஆயுதங்களால் போதை ஆசாமிகள் சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
நள்ளிரவு 2.30 மணியளவில் சிந்தாமணி பகுதியில் உள்ள தெருக்களில் போதையில் சுற்றித்திரிந்த 4 இளைஞர்கள், வீடுகளின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோக்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆயுதங்களால் அடித்து உடைத்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகார் அடிப்படையில், வாகனங்களை உடைத்த அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களை கீரைத்துறை போலீசார் தேடி வருகின்றனர்.
காட்டு தீ காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசம்.. விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved