கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாசன வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாயனூர் கதவணையில் இருந்து கிளை பாசன வாய்க்கால் மூலம் திருக்காம்புலியூர் மற்றும் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்தநிலையில், கிருஷ்ணராயபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடைகழிவு நீர் பாசன வாய்க்காலில் நேரடியாக கலப்பதால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டிகின்றனர்.இதையும் படியுங்கள் : 100 நாள் திட்டத்தில் முறையான வேலை வழங்க கோரிக்கை... பெரம்பலூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை