டெல்லியிலிருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டி அருகே ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.குமாரராஜா பேட்டை ஊராட்சியில் இளைஞர்கள் பிரகாஷ், அரவிந்தன், தமிழரசன் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.இளைஞர்களின் வங்கி கணக்குகளில் 2 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டதை குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது துப்பாக்கி ஏந்திய CRPF போலீசார் 15க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.