கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ரயில்வே தரை பாலத்தில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சாம்பல்பட்டி தரைப்பாலத்தில் ஊத்தங்கரை நோக்கிச் வேகமாக சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்த போது, சாலை மோசமாக இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தில், இருக்கையிலே சிக்கிக் கொண்ட தனியார் பேருந்தின் ஓட்டுநரை ஜேசிபி இயந்திரம் கொண்டு போராடி மீட்டனர். மேலும், காயமடைந்தவர்கள் ஊத்தங்கரை மற்றும் சாமல்பட்டி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.