விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வைத்து வழிபாடு செய்த சுமார் 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்த நிலையில், வாகனங்களில் விநாயகர் சிலைகளை வைத்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். பூலாம்பட்டி காவேரி ஆறு உள்ளிட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வைத்து, விநாயகர் சிலைகளுக்கு வழிபாடு செய்த பின்னர் விசைப்படகு மூலம் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்தனர்.