கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். மல்லாபுரம் கிராமத்தின் வழியாக பாப்பாத்திமூளை என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்து தனியார் பள்ளி வேன், ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.