விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் கஞ்சி கலயம் எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினர். மக்கள் நோய் நொடி இன்றி வாழவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.