கடலூரில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவப்படத்தை எரித்தவர்களை கைது செய்ய கோரி, பாஜகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.