பருவ மழை தொடங்க உள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு துறை சார்பாக, விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி மதுராந்தகம் ஏரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, மாவட்ட தீ அணைப்பு துறை அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில், மதுராந்தகம் கோட்டாச்சியர் ரம்யா முன்னிலையில் ஒத்திகை நடைபெற்றது. மழையால் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ளவர்களை எப்படி மீட்பது? குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தால் வீட்டில் இருந்து எப்படி கரை சேர்வது? முதலுதவி சிகிச்சை எப்படி அளிப்பது? என்பன குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.