விமான நிலையத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி :தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் குரங்கு குறித்தான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாட்டு பயணிகளை வெப்பத்தை அளவிடும் கருவிகள் மூலம் திருச்சி மதுரை பரிசோதனை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 58லிருந்து 64 விமானங்கள் வருகிறது. இதுவரை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை சோதனை செய்துள்ளோம்.தமிழ்நாட்டில் டெங்குவின் பாதிப்பு இதுவரை 11 ஆயிரம் பேர் அதிக அளவில் இருக்கிறது ஆனால் இறப்பு மிகவும் குறைவாக தான் உள்ளது இந்த ஆண்டு நான்கு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டதையடுத்து சைனீஸ் நூடுல்ஸ் மொத்த விற்பனை செய்யும் கடையில் ஆய்வு செய்யப்பட்டது. அவர் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி இருந்தாலும் ஆய்வு செய்யப்பட்டு அங்கு காலாவதியான 800 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.