திண்டுக்கல் மாவட்டத்தில் பேருந்து பயணி தவற விட்ட பணம் மற்றும் நகை மீட்கப்பட்டு, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. போடியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த காளியம்மாள், செம்பட்டி பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, இரண்டரை சவரன் தங்க சங்கிலி மற்றும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பணம் அடங்கிய கைப்பையை தவற விட்டார். இதனையடுத்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு பணம் மற்றும் நகையை மீட்டனர்.