சென்னை அடுத்த போரூர் அருகே இரண்டு வீடுகளை வைத்துக் கொண்டு ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து, 15க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த நபரை, காவல்துறையினர் கைது செய்தனர். கெருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீவத்ஸ் என்ற நபர் தனது வீட்டை குத்தகை மற்றும் விற்பனைக்கு என்று, ஆன்லைன் மூலம் விளம்பரப்படுத்திய நிலையில், அதனை அணுகியவர்களிடம் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்று விட்டு, ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார். இதையடுத்து, மாங்காட்டில் புதிதாக வீடு எடுத்து தங்கி தலைமறைவாக இருந்த அவரை மடக்கிப் பிடித்த போலீசார், மோசடி செய்த பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையும் பாருங்கள் - "யாரும் ஏமாறாதீங்க" - அதிர்ச்சி தகவல், வீடு லீசுக்கு போகும் முன் கவனம் | Chennai house lease issue