நீண்ட நாட்களுக்குப் பிறகு, "மோடி எங்கள் டாடி" என்று மீண்டும் சொன்ன அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. மத்தியில், ஆட்சியில் இருப்பது உங்கள் அய்யா அல்ல, எங்கள் அய்யா என்று கூறி உள்ளார். .திமுகவினரால் மத்திய அரசிடம் இருந்து திட்டங்களை கேட்டு பெற முடியாது என்றும், ஆட்சியில் இருப்பது உங்கள் ஐயா இல்லை, எங்கள் ஐயா எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில், அதிமுக நிலை முகவர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தின் 7 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இதையும் பாருங்கள் - Rajendra Balaji Speech | "மோடி தான் எங்கள் டாடி" மீண்டும் KTR அதிரடி பேச்சு | PM Modi | ADMK BJP