புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவியது.