கிருஷ்ணகிரியில் நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்த நிலையில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்தது. கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பழமை வாய்ந்த ராட்சத மரங்கள் உள்ள நிலையில், இரவு பெய்த மழையால் தைல மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, வெங்கடேஷ் என்பவரின் கார் மீது விழுந்தது. இதில் கார் முழுவதுமாக சேதமடைந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.