விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மிதமான மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் காந்தி மைதானம், விருதுநகர் ரோடு, தங்கச்சாலை தெரு போன்ற இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.