கடலூரில் புதிய ரேஷன் கடை சாதிய பாகுபாட்டுடன் கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி விசிக கவுன்சிலர் உள்ளிட்டோர் எம்எல்ஏவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. வில்வராயநத்தம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை எம்.எல்.ஏ. அய்யப்பன் திறந்து வைத்து விற்பனையையும் தொடங்கி வைத்தார். அப்போது, முதல் விற்பனைக்கான பணத்தை தானே தருவதாகக் கூறி, பெண்ணிடம் வாங்கிய பணத்தை எம்எல்ஏ திருப்பிக் கொடுத்தார். இதைக் கண்ட பெண்கள் தங்களுக்கும் பணம் தருமாறு கூறியதால், மேலும் 10 பேருக்கு கொடுத்தார்.