Also Watch
Read this
தொட்டியப்பட்டியிலிருந்து குளித்தலை வரை அரசு பேருந்து சேவை.. பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ சிவகாமசுந்தரி
மகிழ்ச்சியுடன் பேருந்தில் பயணம்
Updated: Sep 03, 2024 07:24 AM
20 ஆண்டு கோரிக்கையை ஏற்று தொட்டியபட்டி முதல் குளித்தலை வரை அரசு பேருந்தை
கிருஷ்ணாபுரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் துள்ளி குதித்து சந்தோஷத்துடன்
பேருந்தில் ஏறி பயணம் செய்த பள்ளி மாணவ,மாணவி.
கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டிய பட்டி
பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
தொட்டியபட்டி பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி, வேலை செல்லும்
பொதுமக்கள் நடந்து சென்று பேருந்து ஏறி செல்லும் நிலை இருந்து வந்தது கடந்த 20
ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து வசதி வேண்டுமென்று பொதுமக்கள் பலமுறை கோரிக்கை
வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,
இந்த நிலையில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொட்டியபட்டி முதல் குளித்தலை வரை அரசு
பேருந்து இயக்கப்படும் உறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தொட்டியபட்டி பகுதியில் இருந்து பழைய ஜெயங்கொண்டம் வழியாக
குளித்தலை வரை அரசு பேருந்தை கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினராக
சிவகாமசுந்தரி ரிப்பன் வெட்டியும் கொடியசைத்து பேருந்து தொடங்கி வைத்தார்.
பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு கிருஷ்ணாபுரம் சட்டமன்ற
உறுப்பினர் சிவகாமசுந்தரி இனிப்புகள் வழங்கினார்.
பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி பள்ளி மாணவ,மாணவிகள் அரசு
பேருந்தில் உற்சாகத்துடன் ஏரி தங்களது சந்தோஷத்துடன் பள்ளிக்குச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved