நீலகிரி மாவட்டம் உதகை அருகே தொட்டபெட்டா மலை பகுதியில் சிறுத்தை தாக்கியதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஞ்சலை என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இரு நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனிடையே அஞ்சலையின் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில், தொட்டபெட்டா மலை பகுதியில் புதருக்குள் இறந்த படி ஒரு பெண் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், சடலமாக கிடப்பது காணாமல் போன அஞ்சலை தான் என்பதை உறுதி செய்தனர்.