திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் புகுந்த மர்ம நபர்கள் சலூனில் வெட்டப்பட்ட தலை முடிகளை வீசியும், கதவுகளை சேதப்படுத்தியும் சென்றதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஞாயிற்று கிழமை விடுமுறை முடிந்து திங்கட்கிழமை ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி திறக்கப்பட்டது.அப்போது, வளாகத்தில் கழிவறையின் கதவுகள், குழாய்கள் உடைந்தும், மாணவர்கள் விட்டுச் சென்ற புத்தகங்கள் கிழிந்தும் கிடந்ததை கண்டு ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.மேலும் வகுப்பறையில் உள்ள மின்விசிறியின் , இறக்கைகளை வளைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து திருமுருகன் பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.