இராணிப்பேட்டை அருகே சிப்காட் ராஜீவ் காந்தி நகரில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைகள், நூலகம், காலை உணவு திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்த அமைச்சர், தொடர்ந்து மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது ஆறாம் வகுப்பு படிக்கும் தேஜஸ்ரீ என்ற மாணவி, அமைச்சரிடம் திருக்குறள் கூறி அசத்தினார். பின்னர் தூய்மை பணியாளரிடம் நலம் விசாரித்த அமைச்சர், கழிவறைக்கு அருகே இருக்கும் குப்பைகளை அகற்றுமாறு அறிவுறுத்தினார். தூய்மை பணியாளர் பள்ளியை தனது வீட்டை போல் பார்த்துக் கொள்வதாக கூறியதால், அமைச்சர் மகிழ்ச்சியடைந்து பாராட்டினார்.