தூத்துக்குடியில் 30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள டைட்டல் பார்க் வெகு விரைவில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார். தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட்டவுள்ள டைடல் நியோ பார்க் கட்டிடத்தை அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா மற்றும் கீதா ஜீவன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிஆர்பி. ராஜா, அந்நிய முதலீடுகள் தமிழகத்தில் படிப்படியாக வரும் எனவும், 10 லட்சம் கோடி ரூபாய் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.