திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் கேலி சித்திரம் உருவாக்கி, வலைதளத்தில் பொய்யான செய்திகளை வெளியிட்டதாக அமைச்சர் டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகார் அளித்தார். பிறகு செய்தியாளரை சந்தித்த அவர், இதுபோன்ற செயல்களில் டிஆர்பி ராஜா ஈடுபட்டால், வெளியிடங்களில் அவர் நடமாடவே முடியாத அளவிற்கு முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தார். மேலும், அதிமுக கூட்டணிக்கு திருமாவளவன் வந்தால், அவரை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.இதையும் படியுங்கள் : "போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதியத்தை சுரண்டும் திமுக அரசு"