விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே சாலைமறைக்குளம் கிராமத்தில்உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திடீர் ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுமக்கள் ஆங்காங்கே வெயிலில் கூட்டம் கூட்டமாக நின்றதை கண்டு, முகாம் நடத்துவதற்கான சரியான இடத்தை தேர்வு செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக கடிந்து கொண்டார். முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.