கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார். மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்த அவர், மாணவர்களிடமும் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும், ஆங்கிலத்தில் கட்டுரை வாசித்தல், எழுதுதல் குறித்து மாணவர்களின் திறனை சோதனை செய்தவர், நன்கு படிக்க வேண்டும் என அறிவுரையும் வழங்கினார். தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் புத்தக இருப்புகள் குறித்து ஆய்வு செய்தவர், ஆசிரியர்களின் புகார் பெட்டியையும் ஆய்வு செய்தார்.