மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முதலாக பங்கேற்ற நிகழ்ச்சிக்கு 2 மணி நேரம் காலதாமதமாக வந்ததற்காக சிறுபான்மைத்துறை அமைச்சர் சா. மு. நாசர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார். திருவள்ளூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான பரிசளிப்பு விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றியவர் விளையாட்டில் போட்டி பொறாமை இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்றார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.