மக்களை மாக்களாக நினைத்து பேசும் சீமான், அவரின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் வகையில் ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசி, தமிழ்நாட்டு மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கும் அளவிற்கு ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்தார். அரியலூரில் முடிவுற்ற சாலைப்பணிகள், குடிநீர் வழங்கும் வாகனத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர், 10 கோடியே 15 லட்சம் மதிப்பில் செயற்கை இழை ஹாக்கி மைதானம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு செய்தியாளரை சந்தித்தபோது, விரக்தியின் விளிம்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒரு நாள் தான் பேசுவதை, மறுநாள் அவரே மறுத்து பேசுவதாக கூறினார்.