சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சாமி தரிசனம் செய்தார். பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர் சேகர்பாபுவிற்கு அறங்காவலர் குழு சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயிலின் தலைமை குருக்களான பிச்சை குருக்களின் கையை பிடித்தபடி கோயிலுக்குள் சென்ற அமைச்சர், சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தார். கோயில் வளாகத்தில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் அன்னதான கூடத்தை ஆய்வு செய்த அமைச்சர், இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.