பெருவெள்ளத்தின் போது கோயம்பேடு பகுதியில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு 60 ஹெச்.பி. உயர்திறன் கொண்ட மோட்டார்களை நிறுவுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார். கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே புதிதாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.அவர், சொந்த குடும்பத்தில் இழப்பு ஏற்பட்ட போதிலும் மக்களுக்கு பிரச்சனை என்றவுடன் ரயில் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயல் தங்களை போன்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளதாக தெரிவித்தார்.