கோவை மேட்டுப்பாளையம் அருகே கார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அமைச்சர் சாமிநாதன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோத்தகிரி பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் மேட்டுப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியபோது பவானிசாகர் அணை வியூ பாயிண்ட் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி நின்றது.