மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலாத்தளத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக அரசால் பூம்புகார் சுற்றுலா தளத்தை மேம்படுத்த 23 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்று வரும் வரும் நிலையில் அதனை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது முதற்கட்ட பணிகள் தான் நடந்து வருவதாகவும், பிறகு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பேருந்து நிழற்குடை மற்றும் தங்கும் விடுதிகள் கட்டப்படும் என்றார்.