மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதிக்குட்பட்ட வடக்கு மாசி வீதி, மேல மாசி வீதி பகுதிகளில் வீதிவீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளையும், மனுக்களையும் பெற்றார். மதுரை மத்திய தொகுதியில் 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் பணியை அவர் தொடங்கி உள்ளார். வீதி வீதியாக சென்று தொகுதி மக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார். மதுரை மத்திய தொகுதியில் நாளை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில், இன்று மக்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தொகுதிவாசிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரை மத்திய தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும் பொன்னாடை அணிவித்தும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை வரவேற்றனர். அப்போது, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.