தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு உயர்கல்விதுறை அமைச்சராக பொறுப்பு வழங்கி 50 ஆண்டு கால அரசியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் கோவி. செழியன் பெருமிதத்துடன் தெரிவித்தார். உயர்கல்வி துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து நாகைக்கு சென்ற அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.