கடலூர் மாவட்டம் கருங்குழி கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், படம் காட்டுபவர்களுக்கும், ஷோ காட்டுபவர்களுக்கும் இங்கு இடமில்லை என திமுக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். திமுக நிர்வாகிகள் தனது முன்பு ஷோ காட்டாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தன்னார்வலர்களாக செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.