அதிமுகவில் எந்த அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருந்தார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சருக்கான தகுதி உள்ளதாகவும், அதனை ஏற்க வேண்டிய அவசியம் அதிமுகவினருக்கு இல்லை எனவும் கடுமையாக விமர்சித்தார்.