புதுக்கோட்டை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், தாம் உத்தரவிடும் பணிகளை செயல்படுத்தாமல் உள்ளதாக, அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் அதிகாரிகள் குறித்து குற்றம்சாட்டினார். மாஞ்சான்விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், எல்.என்.புரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க உத்தரவிட்டும் பணிகள் நடைபெறவில்லை என்றார்.