திடீர் உடல்நலக் குறைவால் வேலூர் நறுவீ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காட்பாடியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு புறப்படவிருந்த அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.