நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள தொடக்கப் பள்ளியில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் அன்பில் மகேஷ் 234 தொகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் தொடர்ச்சியாக நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பரமத்திவேலூர் அருகே உள்ள பள்ளிக்கு சென்று காலை உணவு சாப்பிடும் மாணவர்களோடு உரையாடி விட்டு பின்னர் தனியாக நின்றிருந்த மாணவர்களிடம் சிறிது நேரம் கேள்விகளை கேட்டார்.