கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய 52 மாணவர்களுடன் மலேசியா நாட்டிற்கு கல்விச் சுற்றுலா செல்லவுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சுற்றுலா செல்லும் மாணவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ், இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, திமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுடன் 8வது முறையாக பன்னாட்டு கல்விச் சுற்றுலா செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார்.