திமுகவின் 75 ஆம் ஆண்டு பவள விழா ஆண்டு உள்ளிட்ட முப்பெரும் விழாவுக்கு 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி மும்பெரும் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்ட அமைச்சர் எ.வ.வேலு பின் செய்தியாளர்கள் சந்திப்பில், மேடை 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கொடிக்கு முக்கியத்துவம் கொடுத்து 50 அடி உயரத்தில் பந்தலை சுற்றி கொடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.